RM20 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்தார் டாக்டர் மகாதீர்

RM20 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்தார் டாக்டர் மகாதீர்

முந்தைய பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் அறிவிக்கப்படவிருந்த பொருளாதார ஊக்கத் திட்டம் அரசாங்கம் திடீரென கலைக்கப்பட்ட பின்னர் தாமதமானது. இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று அதை வெளியிட்டார்.

உலகெங்கிலும் 82,000க்கும் அதிகமான மக்களைப் பாதித்து 2,800க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கோவிட்-19 வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பொருளாதார நிலையை தீர்ப்பதற்கு பண உதவி மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மகாதீர் வெளியிட்டார்.

அந்த நடவடிக்கைகளில் சில விபரம் பின்வருமாறு:

1) டாக்ஸி ஓட்டுநர்கள், சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ரிக்க்ஷா ஓட்டுநர்களுக்கு RM600 பண உதவி.

2) கோவிட்-19ஐ நேரடியாகக் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான RM400 சிறப்பு மாதாந்திர பண சலுகை

3) பிப்ரவரி 2020 முதல் தொற்றுநோய் முடியும் வரை குடியேற்றம் மற்றும் அது தொடர்புடைய முன்னணி ஊழியர்களுக்கான RM200 உதவித்தொகை.

4) மே 2020க்கான பந்துவான் சாரா ஹிடுப் (BSH) கட்டணம் 2020 மார்ச் மாதம் செலுத்தப்படும்.

5) BSH பெறுநர்களுக்கு மே 2020 இல் கூடுதல் RM 100, மற்றும் RM50 இ-வாலட் வடிவத்தில் செலுத்தப்படும்.

6) அனைத்து மலேசியர்களுக்கும் உள்நாட்டு விமானங்கள், ரயில்பயணங்கள் மற்றும் ஹோட்டல் தங்குமிடங்களுக்கு ஒரு நபருக்கு டிஜிட்டல் உள்நாட்டு சுற்றுலா வவுச்சரில் RM100 வரை வழங்கப்படும்.

பொருளாதார தூண்டுதல் தொகுப்பின் பிற நடவடிக்கைகளும், சலுகைகளையும் இன்று அவர் அறிவித்தார்.

“தற்போது நிலவும் சவால்களை எதிர்கொண்டு, தைரியமாகவும், விடாமுயற்சியுடனும் இருக்கவும், இதன் பிறகு இன்னும் வலுவாக எழுந்து வரவும் அரசாங்கம் மக்களை அழைக்கிறது,” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் இதுவரை 22 பேரை பாதித்த கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருந்தவர்களுக்கு மகாதீர் நன்றி தெரிவித்தார்.

“கோவிட்-19 பாதிப்பிலிருந்து மலேசியாவைப் பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், குடிவரவு மற்றும் பிற முன்னணிப் பணியாளர்களுக்கு பாராட்டுக்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார் மகாதீர்.

பொருளாதார தூண்டுதல் தொகுப்பின் பிற நடவடிக்கைகளும், சலுகைகளையும் இன்று அவர் அறிவித்தார்.