கோவிட்-19 – மலேசியாவில் தொற்று நோய் அதிகரிப்பு

கோவிட்-19 – மலேசியாவில் தொற்று நோய் அதிகரிப்பு

மலேசியா இன்று ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 36 ஆகக் கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் துறை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து இதுவே ஒரு நாளில் பதிவாகிய அதிகரிப்பு ஆகும்.

“மார்ச் 3, இன்று மலேசியாவில் ஏழு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 36 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 22 (61.1 சதவீதம்) குணமாகி மீட்கப்பட்டுள்ளன.

“இன்னும் பதினான்கு பேர் சுங்கை புலோ மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ள அனைவரும் சீரான நிலையில் உள்ளனர்” என்று பிரதமர் துறை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா தனது முதல் நான்கு பாதிப்புகளை ஜனவரி 25 அன்று பதிவு செய்தது. அதன் பின்னர் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு நாளில் அதிகபட்சமாக மூன்று என்றே பதிவானது.

பிப்ரவரி 16 முதல் மலேசியா 11 நாட்களுக்கு எந்த புதிய கோவிட்-19 பாதிப்புகளையும் பதிவு செய்யாததால் 22 என்ற எண்ணிக்கையிலேயே இருந்தது.

இருப்பினும், கோவிட் பாதிப்பின் இரண்டாவது அலை பிப்ரவரி 27 அன்று தொடங்கியது. இந்த இரண்டாவது அலையில், ஒரு வாரத்திற்குள் 14 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், முகிதீனுக்கும் இன்று பொருளாதாரம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் தூண்டுதல் தொகுப்பை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்ய பிரதமர் துறை நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது.

இந்த தூண்டுதலை அப்போதைய இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த வாரம் அறிவித்தார். இந்த திட்டம் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் போது வடிவமைக்கப்பட்டது.