‘முகிதீன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத் திட்டம் வெற்றி பெறாது’

‘முகிதீன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத் திட்டம் வெற்றி பெறாது’

பிரதமரின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத் திட்டம் வெற்றிபெறாது, ஏனெனில் முகிதீன் யாசின் தனது நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் என்று மகாதீர் முகமது கூறினார்.

இன்று வெளியிடப்பட்ட சினார் ஹரியனுடனான ஒரு நேர்காணலில், முன்னாள் பொதுத் தேர்தல் வரை பெரிக்காத்தான் கூட்டணியின் புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்று முன்னாள் பிரதமர் நம்புகிறார்.

“இது பொதுத் தேர்தல் வரை நீடிக்கும். இப்போது அவர் (முஹைதீன்) அரசாங்கம் ஆகிவிட்ட போது, அவர் பலருக்கு நிறைய மிட்டாய்களைக் கொடுக்க இயலும். எனது ஆதரவாளர்கள் சிலரை இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் அங்கு சென்று விட்டனர்,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் 114 இடங்களைக் கொண்டிருந்தோம், ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது”.

“நிச்சயமாக அமைச்சர் பதவிகளை மறுப்பது கடினம். நான் அவர்களுக்கு எதுவும் வழங்க முடியாதே”.

இதற்கிடையில், பழைய அரசாங்கத்தின் கொள்கைகளை முகிதீன் தொடருவார் என்றும் மகாதீர் எதிர்பார்க்கிறார்.

“எங்களின் நல்ல கொள்கைகளை உதாரணமாக, Wawasan Kemakmuran Bersama 2030 அகற்ற வேண்டாம் என்று நான் அமைச்சரவையை கேட்கிறேன்..

“அது ஒரு நல்ல கொள்கை, கொள்கையை உருவாக்கியவரும் அமைச்சரவையில் இருக்கிறார். அகற்றி விடாதீர்கள், ”என்று அவர் மேற்கோள் காட்டினார்.