ரெயில்வே துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு

கொரோனா காரணமாக நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்திக்க வேண்டியது வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து வருகிற 31-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்வே துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

31-ந்தேதி வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்திக்க வேண்டியது வரும் என்று கணித்துள்ளனர்.

ரெயில்வே துறையில் ஒவ்வொரு நாளும் 450 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதாவது சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.300 கோடி, பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ.100 கோடி, பார்சல்கள், தபால்கள் அனுப்புவது மூலமாக ரூ.50 கோடி வருமானம் வந்தது. இவை முற்றிலும் நின்று விட்டது.

மேலும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அதற்கான முன்பதிவு கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டியது உள்ளது. அந்த வகையில் ரூ.750 கோடிவரை நஷ்டம் ஏற்படும் என்று கணித்துள்ளனர். ரெயில்கள் ஓடாததால் தனியாக ரூ.ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

பிளாட்பாரம் டிக்கெட்கள் விற்பனை மூலம் வரும் ரூ.150 கோடி வருமானம் நின்றுபோய் உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மொத்தத்தில் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறிஇருக்கிறார்கள்.

maalaimalar