கோவிட்-19: அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சைக்காக உடனே வாருங்கள்

சுவாசிப்பதில் சிரமம் உட்பட கோவிட்-19-இன் அறிகுறிகள் உள்ளவர்கள், விரைவில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் இதனால் அவர்கள் உயிர்பிழப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். .

மலேசியாவில் கிருமியுடன் தொடர்புடைய 15 இறப்புகளுக்கும் ஒரு முக்கிய காரணம், பாதிக்கப்பட்டவர்கள் நோயின் கடைசி கட்டத்தில் இருந்தபோது சிகிச்சைக்காக வந்ததே காரணம் என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நூர் ஹிஷாமின் கூற்றுப்படி, கோவிட்-19 நோய்த்தொற்றின் ஐந்து நிலைகள் உள்ளன என்று கூறினார். 3-ஆம் கட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒருவித நிமோனியா உருவாக்குகின்றன. அதே சமயம் 4-ஆம் கட்டத்தில் இருப்பவர்களுக்கு சுவாசிப்பதில் கடினம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் நிலைக்கு வருவர்.

அடுத்த கட்டம், அல்லது 5-ஆம் நிலை, இனி நன்றாக சுவாசிக்க முடியாத நோயாளிகள், அவர்களுக்கு சுவாசிப்பதற்கான குழாயைச் செருகி, செயற்கை சுவாசக்கருவிகளைப் (வென்டிலேட்டர்களைப்) போட வேண்டியிருக்கும்.

“பெரும்பாலானவர்கள் 3-ஆம் கட்டத்தில் எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே சுவாசிப்பதில் சிரமம் ஆரம்பித்திருக்கும். உதாரணமாக, கடைசி நோயாளி (இறந்தவர்) கடந்த மூன்று நாட்களாக சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்ட பின்னரே எங்களிடம் வந்தார்.

“மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால், இறப்புகளை விரைவாக்குகிறது” என்று அவர் கூறினார்.