‘இது அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இல்லை’ – அன்னுவார் மூசா

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் தொடர்ந்து செயல்பட மதுபான நிறுவனமான ஹெய்னெக்கன் மலேசியாவுக்கு விலக்கு அளித்த பெரிகாத்தான் கூட்டணி (பி.என்) அரசாங்கத்தின் முடிவை சாடியுள்ளார் கூட்டரசு பிரதேச ஆளுநர் அன்னுவார் மூசா. இது அரசாங்க கொள்கைக்கு எதிரானது என்றுள்ளார்.

“இது தெளிவாக முடிவு செய்யப்பட்ட அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இல்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விலக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நெட்டிசன் குறித்து அம்னோ தலைவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு/Kementerian Perdagangan Dalam Negeri dan Hal Ehwal Pengguna (KPDNHEP), அந்த மதுபான நிறுவனத்திற்கு அளித்த விலக்கு குறித்த ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியது.

மார்ச் 31 அன்று வெளியிடப்படுள்ள அக்கடிதத்தில், மார்ச் 24 அன்று ஹெய்னெக்கன் மேற்கொண்ட ஒரு விண்ணப்பத்தைத் தொடர்ந்து, அமைச்சு அந்த மதுபான நிறுவனத்தை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் செயல்பட அனுமதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஹெய்னெக்கன் பின்னர் ஒரு அறிக்கையில் கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி, தற்போதைய கட்டுப்பாடு காலத்தின் போது, அவர்களின் வரையறுக்கப்பட்ட செயல்பாடு, 10 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியது.

முன்னதாக, பெரிக்காத்தான் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பாஸ், இந்த மதுபான நிறுவனத்திற்கு அளிக்கப்படும் விலக்கை எதிர்த்தது.

பாஸ் மத்திய குழு உறுப்பினர் நஸ்ருதீன் ஹசான், அக்கடிதம் உண்மையா அல்லது பொய்யா என்று தனக்குத் தெரியாது என்றுள்ளார். எனவே கடிதம் உண்மை என்று மதுபான நிறுவனம் உறுதிப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கையும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“இது உண்மையாக இருந்தால், முஸ்லிம்கள் குறிப்பாக புண்படுத்தப்படுவார்கள் என்றும் இந்த விதிவிலக்கை எதிர்ப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன்”, என்றார்.

“பாஸ் இப்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், விலக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கும் ரத்து செய்வதற்கும் அரசாங்கத்தை இணங்கச்செய்ய நிச்சயமாக பாஸ் முக்கிய பங்கு வகிக்கும்”.

“மதுபானம் மக்களுக்கு ஒரு முக்கிய பானம் அல்ல. இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றோ நாடு நடமாட்டக் காலத்தை எதிர்கொள்ளும் போது மக்கள் இதனால் அல்லல் படுவார்கள் என்றோ இல்லை” என்று நஸ்ருதீன் இன்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.