நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

கோவிட்-19 பாதிப்பை தடுக்க மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை தடுக்க மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கி ஏப்ரல் 14 வரை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இது, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.