கோவிட்-19: ஓர் இறப்பு, 88 புதிய பாதிப்புகள், 64.4 சதவீதம் மீட்கப்பட்டுள்ளனர்

மலேசியாவில் இன்று 88 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று ஓர் இறப்பும் பதிவாகியுள்ளது. இதனால் மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 பேர் ஆகும். மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,691 ஆக பதிவாகியுள்ளது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 121 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக அறிவித்தார். இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3,663 அல்லது 64.4 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது.

குணப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கருத்தில் கொண்டு, மலேசியாவில் தற்போது செயலில் உள்ள சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகள் 1,932 பேர் உள்ளனர்.

இவர்களில் 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருந்தனர், அவர்களில் 18 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.