கோவிட்-19: ஓர் இறப்பு, 40 புதிய பாதிப்புகள், 67.9% குணமடைந்துள்ளனர்

கோவிட்-19-ல் இருந்து மலேசியா மற்றொரு மரணத்தை பதிவு செய்துள்ளது. இது நாட்டில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை 99 ஆகக் கொண்டு வந்துள்ளது.

இன்று மதியம் வரை 40 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது பதிவு செய்யப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 5,820 ஆகக் கொண்டு வந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

3,957 அல்லது 67.9 சதவிகிதம் குணமடைந்தவர்களை கருத்தில் கொண்டு (இன்றைய 95 உட்பட), மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,764 ஆகும்.

இதில், 37 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 17 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

99-வது இறப்பு (‘நோயாளி 4087’) – இன்று பதிவாகியுள்ள இறப்பு, 78 வயதான மலேசிய நபர் சம்பந்தப்பட்டது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற வரலாற்றைக் கொண்ட இந்நோயாளி, ஏப்ரல் 7 ஆம் தேதி ஜோகூரின் என்சே பெசார் ஹஜ்ஜா கால்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏப்ரல் 27 அன்று அதிகாலை 4.31 மணிக்கு இறந்துவிட்டார்.