ஊரடங்கு நீட்டிப்பு?- மறைமுகமாக கூறிய பிரதமர் மோடி

முதல்-மந்திரிகளுடனான ஆலோசனையில் பங்கேற்ற பிரதமர் மோடி

கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 4-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி மறைமுகமாக கூறியிருக்கிறார்.

புதுடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 4-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி மறைமுகமாக கூறியுள்ளார்.

அதாவது, முதல் ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் 2-வது ஊரடங்கில் தேவைப்படவில்லை. 3-வது ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் 4-வது ஊரடங்குக்கு தேவையில்லை.

ஊரடங்கை தளர்த்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய முதலமைச்சர்களுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் தனிமனித இடைவெளியைமிகப்பெரிய ஆயுதம் எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்நிலையில், மே-17ஆம் தேதிக்கு பிறகும், சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என, பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து தெரிவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அனைத்து சூழ்நிலைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்

malaimalar