ரமலான் பெருநாள் கொண்டாட்டம் கொரோனா கிருமியால் கட்டுப்பாடு

மக்கள் SOP இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில், வரும் நோம்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் போது மலேசிய காவல்துறை மற்றும் மலேசிய ஆயுதப்படை ரோந்துகளை மேற்கொள்ளும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இது, COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்தவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள SOP-க்களுக்கு பொதுமக்கள் இணங்குவதை உறுதி செய்யவும் அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்று  இஸ்மாயில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, கொண்டாட்டத்தின் முதல் நாளில், குடியிருப்பின் அளவைப் பொறுத்து 20 பேருக்கு மிகாமல் மட்டுமே உபசரிப்புகள் நடத்தப்படலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதோடு, நோம்புப் பெருநாளை கொண்டாடும் நோக்கில் மாநில எல்லையை கடக்க முயற்சிக்கும் தனிநபர்களுக்கு அபராதம் விதிப்பது உட்பட தீர்க்கமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இத்தகைய பொறுப்பற்ற நடத்தை, கோவிட்-19 பரவுவதைத் தடுக்க முயற்சிக்கும் முன்னணி பணியாளர்களின் தேவையான சேவை வாகனங்கள் அதன் குறிப்பிட்ட இலக்கை அடைய தடையாக இருக்கிறது என கூறினார்.

ஊர்களுக்கு திரும்புவது, திறந்த இல்ல உபசரிப்பு, மற்றும் கல்லறைக்கு செல்வது என்பது தற்போது ஒரு பரபரப்பான விஷயமாக உள்ளது. இருப்பினும், COVID-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த, கல்லறைக்குச் செல்ல வேண்டாம் என்று சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.