14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார் முகிதீன்

பிரதமர் முகிதீன் யாசின் இன்று முதல் வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்தப்படுகிறார்.

புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு நேர்மறையான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டதைத் தொடர்ந்து மிகிதீன் தனிமைப்படுத்தப்படுகிறார் என அறியப்படுகிறது.

இன்று காலை ஒரு பிணிப்பாய்வு சோதனையில் முகிதீன் நோய்க்கு எதிர்மறையாக இருப்பதாகவே உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று முதல் 14 நாட்களுக்கு தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்” என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டமும் எல்லா நேரங்களிலும் கடுமையான கூடல் இடைவெளி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கடைப்பிடித்துள்ளது என்றும் பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியது.