கட்சியை எடுக்க விரும்புகிறீர்களா? எடுத்துக் கொள்ளுங்கள்! – சையத் சாதிக்

பெர்சத்து இளைஞர் அணி தலைவர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், அவரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்த மாட்டார் என்றும் அவர் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடுத்திருக்கும் தனது சிவில் வழக்கை திரும்பப் பெறுவதாகவும் கூறியுள்ளார்.

“நீங்கள் கட்சியை எடுக்க விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்! எனது உறுப்பினர் எண்ணை நீக்க விரும்பினால், அதையும் தூக்கி எறியுங்கள். உங்கள் முயற்சிகளை நான் தாமதிக்க மாட்டேன்.”

“பெர்சத்து கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்கம் செய்ததற்கு எதிராக எனது சிவில் வழக்கையும் நான் திரும்பப் பெறுவேன்.”

“பெர்சத்து மற்றும் அர்மாடாவில் எனது சேவை இனி தேவைப்படாதபோது, நான் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மே 18 நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியில் அமர்ந்த டாக்டர் மகாதிர் முகமதுவுக்கு ஆதரவாக இருந்த சையத் சாதிக் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பியம் ரத்து செய்யப்பட்டதாக பெர்சத்து ஏகமனதாக அறிவித்தது.

பெர்சத்து அவைத் தலைவராக இருந்த மகாதீரின் நிலையும் தற்போது சர்ச்சையில் உள்ளது. அவர் தற்போது தலைவர் முகிதீன் யாசினுடன் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.

இன்று, அர்மாடா அதன் துணைத் தலைவர் ஐசாட் ரோஸ்லானை செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

முவார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சையத் சதிக், தனது எதிர்காலத் திட்டங்களை வெளியிடவில்லை, ஆனால் அவை “நாட்டையும் இளைஞர்களையும் சார்ந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

“இந்த பாதை எளிதானது அல்ல என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஒரே பாதையில் செல்வோருக்கும் அதே கதி தான். இடது, வலது என்று எல்லா பக்கமும் நெருக்கடி கொடுக்கப்பட்டு, பதவிகளைப் பறித்து தூக்கி எறியப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அரசியல் கட்சிகள் தனிநபரின் நலனுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் அல்ல என்பதையும், நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான ஒரு “வாகனம்” என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அர்மாடா மற்றும் பெர்சத்து கட்சியில் தனக்கு கிடைத்த அனுபவத்தை எப்போதும் அவர் மதிப்பதாகவும் கூறினார்.