படுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு விலகினார்

படுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வேய், சரவாக் டிஏபி துணைத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியை விட்டும் விலகுவதாக அறிவித்தார்.

“முதலாவதாக, அடுத்த சரவாக் தேர்தலில் படுங்கான் சட்டமன்றத்தை பாதுகாக்க என்னை மீண்டும் போட்டியிட நியமித்த டிஏபிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”

“டிஏபி தலைமையும், அடிமட்ட உறுப்பினர்களும் படுங்கான் தொகுதியை வெற்றிக்கான சிறந்த வாய்ப்பாக கருதுகின்றனர். அப்படியிருந்தும், இந்த வாய்ப்பை நான் மரியாதையுடன் நிராகரிக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

டிஏபி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தனது தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருக்க உறுதிகொண்டதாகவும், ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சரவாக் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை கண்டுபிடிப்பதற்கான ஏற்பாட்டை டிஏபி செய்ய முடியும் என்பதால் தான் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வோங் கூறினார்.

டிஏபியின் விரோதமான அல்லது வாத நோக்கத்துடன் கையாளும் முறையால் தான் ஏமாற்றமடைந்ததாகவும், அரசியல் என்பது தாக்குதல்களைத் தொடங்குவது மட்டுமல்ல என்றும் வோங் கூறினார்.