அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் – கவிஞர் வைரமுத்து

அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை, மக்கள் குடியரசுத் தலைவர், ஏவுக்கணை நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அப்துல் கலாம் இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்று கூறி ஊக்க சக்தியாக இருந்தவர்.

அப்துல் கலாம் மறைந்து 5வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அப்துல் கலாம் நினைவு நாளில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கடல் மீன் அளந்த குடும்பத்தில் விண்மீன் அளந்ததும், ராமேஸ்வரத்தின் சந்தில் இருந்து பால் வீதிவரை பயணமுற்றதும், இந்தியாவின் பெரிய வீட்டில் பிரம்மச்சாரியாய் தனிமை காத்ததும் பெருமையல்ல என குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் என்றும், அது தான் அவரின் பெருமை எனவும், தமது கவிதையில் தெரிவித்துள்ளார்.

dailythanthi