இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

அதிபர் கோத்தபய ராஜபக்சே

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

கொழும்பு: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில்  கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.  நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். அதாவது, அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதற்கிடையே, இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினைப் பதிவுசெய்து வருகின்றனர். வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை  நடைபெற உள்ளது. தேவைப்பட்டால், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

நாளை காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும். நள்ளிரவுக்குள் முடிவு தெரிய வரும் என கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

malaimalar