இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாகிறது

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன.

இந்தநிலையில் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன், பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் நாளை (14-ந்தேதி) இணையதளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார்.

இதுகுறித்து வைபவ் கூறும்போது, ‘துப்பறியும் திகில் கதையம்சம் உள்ள படம் லாக்கப். கதையும் கிளைமாக்சும் வித்தியாசமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கும். நானும் வெங்கட் பிரபுவும் போலீஸ் அதிகாரிகளாக வருகிறோம். திரைக்கதை விறுவிறுப்பாக நகரும். தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதோடு ரிலீசுக்கு பல பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையில் உள்ளன. எனவேதான் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்கிறோம்.

வீட்டில் குடும்பத்தோடு அதிகமானோர் லாக்கப் படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனது காட்டேரி, ஆலம்பனா ஆகிய படங்கள் தியேட்டரில் ரிலீசாகும்” என்றார்

dailythanthi