சில தேசிய கூட்டணி இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்குவர்!

சபா மாநிலத் தேர்தலில் பல தொகுதிகளில் தேசிய கூட்டணியில் இருந்து (பி.என்) இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பாரிசான் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா சுட்டிக்காட்டினார்.

“பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்க வாய்ப்புள்ளது.”

“எடுத்துக்காட்டாக, பெர்சத்து (Bersatu) இருந்தால் அநேகமாக ஸ்டாரும் (STAR) இருக்கும் … ஒவ்வொருவரின் சுயவிவரத்தையும் வலிமையையும் நாங்கள் ஆராய வேண்டும்,” என்று அவர் அறிவித்தார்.

பெர்சத்து தேசிய கூட்டணியை வழிநடத்துகிறது. ஆனால் அம்னோ அதிகாரப்பூர்வமாக இந்த கூட்டணியில் சேரவில்லை. மறுபுறம், அம்னோ, பிஏஎஸ் மற்றும் பெர்சத்து உடன் முவாபாக்கட் நேஷனல் ஒப்பந்தத்தில் உள்ளது.

இதற்கிடையில், ஒரு இணக்கமான பேச்சுவார்த்தையின் மூலம் போட்டியிட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை குறித்து அம்னோ மற்றும் பெர்சத்து ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிப்பை சபா பாரிசான் தலைவர் புங் மொக்தார் ராடின் அறிவிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

அம்னோ மற்றும் பெர்சத்து 45 இடங்களில் கவனம் செலுத்துவார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலான இடங்கள் பூமிபுத்ரா முஸ்லிம்கள் அடங்கியவை என்றும், மீதமுள்ள 28 இடங்கள் தேசிய கூட்டணியின் கீழ் உள்ள மற்ற கட்சிகளால் போட்டியிடப்படும் என்றும் அன்வார் கூறினார்.

செப்டம்பர் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள சபா மாநில தேர்தலில் மொத்தம் 73 சபா மாநில சட்டமன்ற இடங்கள் போட்டியிடப்படும்.

வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆரம்ப வாக்களிப்பு நாள் செப்டம்பர் 22 ஆகும்.