உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – 9.27 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9.27 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,27,984 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 29,175,454 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,018,175 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 60,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

malaimalar