இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் முஹைதீன் யாசினின் சிறப்பு உரை

நாட்டின் கோவிட் -19 நிலைமை குறித்து இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் முஹைதீன் யாசின் சிறப்பு உரையாற்றவுள்ளார். இதை அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

பிரதமரின் உரை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் முக்கிய தொலைக்காட்சி நிலையங்களான ஆர்.டி.எம், பெர்னாமா டிவி, டிவி திகா மற்றும் ஆஸ்ட்ரோ அவானி அறிவித்துள்ளது.

நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணை தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. நிலைமையை சரிசெய்ய மீட்பு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

கடந்த வாரத்திலிருந்து கோவிட் -19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நேற்றைய புள்ளிவிவரப்படி மொத்தம் 432 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், மத விவகார அமைச்சர் சுல்கிப்லி மொஹமட் அல் பக்ரி, சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் லிம் யி வெய் (கம்புங் துங்கு) மற்றும் சதிரி மன்சோர் (கோத்தா டாமன்சாரா) ஆகியோரும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.