75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

புதுடெல்லி, உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

dailythanthi