கோவிட் 19 : 869 புதிய தொற்றுகள், 10 நாட்களில் சபாவில் 38 இறப்புகள்

இன்று மதியம் வரை, நாட்டில் 869 கோவிட் -19 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,

இவை அனைத்தும் உள்ளூர் நோய்த் தொற்றுகள், அவற்றுள் 224 சிறைச்சாலை தொடர்புடைய தொற்றுகளாக பதிவாகியுள்ளன.

சபாவில் 451 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளன. தொடர்ந்து கடந்த 10 நாட்களில் சபாவில் 38 இறப்புகள் நேர்ந்துள்ளன.

கோத்தா கினபாலுவில், 78 மற்றும் 88 வயதுடைய 2 மலேசிய ஆண்கள், தாவாவ்’வில் 71 வயது மலேசியப் பெண்மணி ஒருவர் மற்றும் சண்டகானில் 53 வயதுகொண்ட வெளிநாட்டு ஆண் ஆகியோர், இந்த கொடுந்தொற்றுக்கு இன்று மரணமடைந்துள்ளனர்.

இன்று, சபாவை அடுத்து, பினாங்கில் 189, சிலாங்கூரில் 159, கெடாவில் 38, கோலாலம்பூரில் 15, சரவாக் மற்றும் பேராக்கில் 4, திரெங்கானுவில் 3, ஜொகூர் மற்றும் புத்ராஜெயாவில் 2, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் 1 எனப் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.