இந்தியாவுடனான நட்பை மதிக்கிறோம்! டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன்

வாஷிங்டன் : ”இந்தியா உடனான நட்புறவை மதிக்கிறோம்,” என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

காற்று மாசுஅமெரிக்க அதிபர் பதவிக்கு, நவ.,3ல் நடக்கும் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளரான, அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.சமீபத்தில் நடந்த பொது விவாதத்தின்போது, இந்தியாவுக்கு எதிராக, டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜோ பிடன் கூறியுள்ளதாவது:சமீபத்தில் நடந்த பொது விவாதத்தின்போது, இந்தியா உட்பட சில நாடுகள் காற்று மாசுவை ஏற்படுத்தும் குப்பைகளாக உள்ளதாக, டொனால்டு டிரம்ப் கூறினார்.

நடவடிக்கை : இப்படித்தான் ஒரு நட்பு நாட்டை பற்றி பேசுவதா… சர்வதேச அளவிலான, பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு இதுதான் வழியா?கமலா ஹாரிஸ் மற்றும் நான், இந்தியாவுடன் நட்புறவை மதிக்கிறோம். அதுதான் எங்கள் வெளியுறவு கொள்கையின் மையப் புள்ளியாக இருக்கும். பராக் ஒபாமா – ஜோ பிடன் காலத்தின்போது, இந்தியாவுடனான நட்பு வலுவாக இருந்தது.ஜோ பிடன் – கமலா ஹாரிஸ் காலத்தில், அது மேலும் வலுப்படும். இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகளாக இருக்க வேண்டும்.

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நீண்டகாலமாக நான் சொல்வது போல், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து, பயங்கரவாதத்தை எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்.சீனா மற்றும் மற்ற அண்டை நாடுகளின் தொந்தரவு இல்லாமல், இந்தியாவில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். இந்தியாவின் நண்பர் டிரம்ப்

malaimalar