2021 பட்ஜெட்டை ஆதரிக்குமாறு மாமன்னர் எம்.பி.க்களைக் கேட்டுக்கொண்டார்

மாட்சிமைத் தங்கியப் பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நவம்பர் 6-தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொண்டார்.

கோவிட் -19 ஐ கையாள்வதிலும், நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதிலும் வரவு செலவு திட்டத்தின் முக்கியத்துவத்தை மன்னர் வலியுறுத்தியுள்ளதாக, அரண்மனை பேச்சாளர், அஹ்மத் ஃபாடில் சம்சுதீன் அரண்மனை ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும், குறிப்பாக முன்னணி ஊழியர்கள் கோவிட் -19 அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும், கொள்கைகளையும் முயற்சிகளையும் தொடரவும் முக்கியமானது என்பதை அல்-சுல்தான் அப்துல்லா வலியுறுத்தினார்.

அனைத்து அரசியல் மோதல்களையும் நிறுத்தி, மக்களின் நலன் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க, அவரது ஆலோசனையை மதிக்குமாறு மக்களவை உறுப்பினர்களுக்கு அல்-சுல்தான் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.