பிரதமர்: பட்ஜெட் 2021, கோவிட் -19 கட்டுப்பாட்டு முயற்சிகளில் கவனம் செலுத்தும்

நவம்பர் 6-ம் தேதி, தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் கவனம் செலுத்தும் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

அக்கறை கொண்ட ஓர் அரசாங்கமாக, மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் தனது தரப்பு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் கூறினார்.

“தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கம் கூடுதல் (பொருத்தமான) நடவடிக்கைகளை எடுப்போம். முன்னதாக RM305 பில்லியன் (பயன்படுத்தப்பட்டது), தொடர்ந்து, 2021 பட்ஜெட்டிலும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

“(இதுவரை) நாம் சுகாதார அமைச்சிற்காக கிட்டத்தட்ட RM2 பில்லியனைச் செலவிட்டுள்ளோம், அதிகம் பாதிப்புக்குள்ளான சபாவுக்கு மட்டும், கடந்த சில வாரங்களில் சுமார் RM400 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது, இதில் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருத்துவக் கருவிகளும் அடங்கும்,” என்றார் அவர்.

  • பெர்னாமா