அமெரிக்க மாகாண தேர்தலிலும் இந்திய வம்சாவளியினர் வெற்றி

வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலுடன் நடந்த பல மாகாணங்களுக்கான சட்டசபை தேர்தலில் முதன் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 12க்கும் அதிகமானோர் வெற்றி பெற்று உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன் மாகாண சட்டசபைகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது.இதில் நியூயார்க் மாகாண சட்டசபை உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெனிபர் ராஜ்குமார் 38 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இம்மாகாண சட்டசபைக்கு தேர்வான முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிமா குல்கர்னி கென்டகி சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார். கேஷா ராம் வெர்மாண்ட் சட்டசபை செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வாஷிங்டன் சட்ட சபைக்கு வந்தனா ஸ்லேட்டர்; மிச்சிகன் சட்டசபைக்கு பத்மா குப்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஓஹியோ மாகாண செனட் சபைக்கு முதன் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரஜ் அன்தானி தேர்வாகியுள்ளார்.

வடக்கு கரோலினா மாகாண செனட் உறுப்பினராக ஜெய் சவுத்ரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அரிசோனா மிச்சிகன் மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்களாக முறையே அமிஷ் ஷா ரஞ்ஜீவ் புரி தேர்வாகிஉள்ளனர்.பென்சில்வேனியா சட்டசபை செனட் உறுப்பினராக முதன் முறையாக பத்திரிகையாளர் நிக்கில் சாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுபோல ஜெரிமி கூனி முதன் முறையாக நியூயார்க் சட்டசபை செனட் உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

கலிபோர்னியா சட்டசபை உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ் கல்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார். இது தவிர அமெரிக்க பார்லி.யின் பிரதிநிதிகள் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் அமித் பேரா பிரமிளா ஜெயபால்ரோ கன்னா ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புமிக்கது

இந்திய வம்சாவளியினரின் அரசியல் ஆலோசனைக் குழு தலைவரும் தேர்தல் பிரசாரத்திற்காக 75 கோடி ரூபாய் திரட்டித் தந்த இம்பேக்ட் பண்ட்ஸ் நிறுவனருமான நீல் மகிஜா கூறியதாவது: இந்த தேர்தலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய பூர்வகுடியினர் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளனர்.மேலும் முதன்முறையாக அதிக அளவில் மாகாண சட்டசபையில் இடம் பெற்றுள்ளனர். இது இந்திய வம்சாவளியினரை பொறுத்தவரை வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாகும், என்றார்.

dinamalar