அமெரிக்காவில் ஜோ பைடன் அமைச்சரவையில் பராக் ஒபாமா?

அமெரிக்காவில் அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் அமைச்சரவையில் இடம் பெற்றால் தனது மனைவி பிரிந்து சென்று விடுவார் என பராக் ஒபாமா கூறியுள்ளார்.

வாஷிங்டன், அமெரிக்காவில் 44வது அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா.  இவரது தலைமையின் கீழ் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை துணை அதிபராக பைடன் இருந்துள்ளார்.  சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.  இதேபோன்று தெற்காசியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகிறார்.

இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்று கொள்ள இருக்கிறார்.  இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஒபாமா, பைடனுக்கு எனது ஆலோசனை தேவைப்படாது.  அவர் தனது அமைச்சரவையில் எனக்கு ஓரிடம் அளிக்கிறார் என்றால், அதில் நான் இடம் பெறமாட்டேன்.  ஒருவேளை பைடன் அமைச்சரவையில் சேர்ந்து விட்டால், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்து உள்ளார்.

ஆனால், பைடனுக்கு தன்னால் முடியும் பட்சத்தில் உதவி செய்வேன் என்று ஒபாமா உறுதியுடன் கூறியுள்ளார்.  வெள்ளை மாளிகை பணியாளராக உடனடியாக செயல்பட நான் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றும் ஒபாமா கூறியுள்ளார்

dailythanthi