கோவிட் 19 : இன்று 1,096 புதியத் தொற்றுகள், 3 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,096 கோவிட் -19 புதியத் தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவைச் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன.

அதேசமயம் 1,104 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிகையிலான புதிய பாதிப்புகள் உருவாக தெராத்தாய் திரளை காரணம் எனச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் பதிவாகிய 603 புதிய கோவிட் -19 தொற்றுகளில், 504 <em>தோப் க்ளோ மேரு தொழிற்சாலை தொழிலாளர்களை உள்ளடக்கியது.

இன்று 3 மரணங்கள் நேர்ந்துள்ளன, மூன்றும் சபாவில் பதிவாகியுள்ளன. ஆக, நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 335-ஆக உயர்ந்துள்ளது.

அவசரப் பிரிவில் 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 46 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

திரெங்கானு, பஹாங் மற்றும் சரவாக்கில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாநிலம் வாரியாக, இன்றையப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 603, சபாவில் 311, பேராக்கில் 55, கோலாலம்பூரில் 30, நெகிரி செம்பிலானில் 29, பினாங்கில் 15, கெடாவில் 16, பினாங்கில் 15, லாபுவானில் 13, ஜொகூரில் 9, கிளந்தானில் 8, மலாக்காவில் 5, பெர்லிஸ் மற்றும் புத்ராஜெயாவில் தலா 1,

மேலும் இன்று, 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை :- பங்காலான் பாராட் திரளை – பினாங்கு, பாராட் டாயா மாவட்டம் & பேராக், கெரியான், கோல கங்சார் & கிந்தா மாவட்டங்கள்; பக்தி திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம்; பாயாம் இண்டா திரளை – கெடா, கூலிம் & கோலா மூடா மாவட்டங்கள்.