எழுந்து நிற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்களை மகாதீர் விமர்சித்தார்

2021 பட்ஜெட்டிற்கான பிரிந்திசை வாக்களிப்புக்கு (divisional voting) ஆதரவாக எழுந்து நிற்காத அரசு சாரா எம்.பி.க்களை டாக்டர் மகாதீர் முகமது விமர்சித்தார்.

“எம்.பி.க்களின் ஊழல் மற்றும் இலஞ்சம் மூலம் நிறுவப்பட்ட ஓர் அரசாங்கம், ஊழல் நிறைந்த அரசாங்கம், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறிய குற்ற உணர்ச்சியை சிறிதும் உணராமல், எதிர்க்கட்சி எம்.பி.க்களால் எப்படி ஆதரிக்க முடிந்தது.

“இதுதான் இன்று மக்களவையில் நடந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

பலரின் கவனத்தை ஈர்த்த 2021 பட்ஜெட் , இறுதியாக மக்களவையில் வாக்களிப்பு மூலம் கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்டது.

பிரிந்திசை வாக்களிப்பு நடத்த, மஹ்புஸ் ஒமார் (பி.எச்-போகோக் செனா)  மேற்கொண்ட முயற்சி, நாடாளுமன்றத்தில் 13 உறுப்பினர்களை மட்டுமே பெற்ற நிலையில் தோல்வியுற்றது, இரண்டு வாக்குகள் குறைந்ததால்.

நான்கு பெஜுவாங், அமானாவிலிருந்து ஆறு பேர், பி.கே.ஆர், டிஏபி மற்றும் சரவாக் பெர்சத்து கட்சி ஆகிய எம்.பி.க்களிடமிருந்து தலா ஓர் ஆதரவு பெறப்பட்டது.

இதற்குப் பிறகு, 2021 வரவுசெலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, மீண்டும் வாக்களிக்கப்படுவதற்கு முன்னர் குழு மட்டத்திலான விவாதத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

அனைத்து பெஜூவாங் எம்.பி.க்கள் உட்பட, எழுந்து நின்ற அனைத்து எம்.பி.க்களும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மகாதீர் தனது வலைப்பதிவில் கூறினார்.

“நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, ​​மக்கள் பிரதிநிதிகள் என்ற எங்கள் மீதுள்ள நம்பிக்கை மற்றும் பொறுப்பின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டோம்,” என்று அவர் கூறினார்.