‘யூபிஎஸ்ஆர் இல்லாமலேயே போகலாம்’

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வை, இரத்து செய்வதற்கான திட்டம் தற்போது கல்வி அமைச்சின் ஆய்வின் இறுதி கட்டத்தில் உள்ளது.

துணைக் கல்வி அமைச்சர் I, முஸ்லீமின் யஹாயா, இது குறித்த ஆய்வுகள் முடிந்ததும், விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

“பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கம், யூபிஎஸ்ஆர் தேர்வு இருக்காது … கடந்த ஆண்டு அத்தேர்வௌ எழுதிய மாணவர்களே கடைசி குழுவாக இருக்கலாம்,” என்றார் அவர்.

யூபிஎஸ்ஆருக்குப் பதிலாக, மற்றொரு தேர்வை நடத்துவது குறித்து கல்வியமைச்சு இன்னும் எந்த ஒரு ஆய்வும் செய்யவில்லை என்றும் அவர் மேலும் சொன்னார்.

ஆறாம் ஆண்டு மாணவர்களின் கல்வி அடைவுநிலை, தொடர்ச்சியான மதிப்பீடுகள், கட்டுரை சோதனைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, ஐந்து வகையான சிறப்பு பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று விளக்கமளித்தார்.