‘இந்தியாவின் வலிமையை உயர்த்த உதவிய வைரஸ்’

பீஜிங்: கொரோனா வைரஸ், இந்தியாவின் வலிமையை அதிகரிக்க உதவியுள்ளது’ என, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, தான் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, ஹாங்காங்கில், ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகையில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியின் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் அவர் எழுதியுள்ளதாவது: கொரோனா வைரஸ், இந்தியாவை பல அம்சங்களில் வலிமையாக்க துாண்டுகோலாக இருந்துள்ளது. சுய ஆற்றல் மூலம், கொரோனா வைரசை எதிர்கொள்ளவும், உலகஅளவில் உதவிகள் செய்து, சிறப்பான பேர் எடுக்கவும் துணை புரிந்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவின் ஆற்றல் உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கான தேவை பெருகிய போது, அவற்றின் தயாரிப்பை அதிகரித்து, 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்தது.

நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகியவை பாதிக்கப்பட்ட போது, ‘தற்சார்பு இந்தியா’ கொள்கை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியது. கொரோனா,உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதில் இருந்து மீள்வதை மட்டுமே குறியாகக் கொண்டு, நிலைமையை இந்தியா சுலபமாக சமாளித்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கல்வி, தயாரிப்பு, வேளாண் உள்ளிட்ட முக்கிய துறைகளில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை செய்துள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை தடுக்க, அறிவியல் ரீதியான கண்டுபிடிப்பை மேற்கொண்டதிலும், உறுதியான முடிவுகளை எடுத்ததிலும், உலக அளவில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. பில்கேட்ஸ் தலைவர், பில் அண்டு மெலின்டா அறக்கட்டளைஉலகிலேயே அதிகமாக தடுப்பூசி தயாரிக்கும் நாடு என்ற வகையில், இந்தியாவுடன் இணைந்து, கொரோனா தடுப்பூசி மருந்தை, அனைத்து நாடுகளிலும் வினியோகிக்க ஆர்வமாக உள்ளோம்.
டெட்ரஸ் அதனம்

கேப்ரியேசஸ் டைரக்டர் ஜெனரல்,

உலக சுகாதார நிறுவனம்.

dinamalar