மக்கள் பராமரிப்பு உதவி தொடர்பலை மீண்டும் செயல்படுகிறது

கடந்த திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்ட, ‘மக்கள் பராமரிப்பு உதவி’ தொடர்பலை  [Bantuan Prihatin Rakyat (BPR)] 1800-88-2747, இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தொடர்பலை இயங்கும் என உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘மக்கள் பராமரிப்பு உதவி’ பற்றிய விளக்கங்களைப் பெற, உள்நாட்டு வருவாய் வாரியம் தவிர்த்து, அதன் அதிகாரப்பூர்வத் தளம் https://bpr.hasil.gov.my/ -உம் பொதுமக்கள் வலம் வரலாம்.

‘மக்கள் பராமரிப்பு உதவி’க்கான பதிவு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை திறந்திருக்கும்

. RM6.5 பில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த உதவிநிதி, 8.1 மில்லியன் பெறுநர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • பெர்னாமா