டெல்லியில் கொரோனா பரிசோதனை 1 கோடியை கடந்து புதிய சாதனை: முதல் மந்திரி கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது என முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.33 லட்சம் அளவை தொட்டுள்ளது.  எனினும், 6.20 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளது ஆறுதலளிக்கிறது.  10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.  2,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி புதிய சாதனை படைத்து உள்ளது.  கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், டெல்லியில் 1 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

இது டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு சமம் ஆகும்.  அதிகரிக்கப்பட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

dailythanthi