உருமாறிய கொரோனா வைரஸையும் அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலைநாட்டுத் தடுப்பு மருந்துகள் உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தும் பணி கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் துவங்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமாகியவர்களுக்கு மீண்டும் வைரஸ் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழும். இதற்கு தற்போது விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர்.

ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்காமல் தடுக்கும் என்று இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆராய்ச்சியின் முடிவு நேச்சர் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

ஆகவே ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவது அரிது என்று இந்த ஆராய்ச்சிமூலம் தெரியவந்துள்ளது. நுரையீரல், மேல் கழுத்துப்பகுதி, சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயிரிகள் மெமரி பி எதிர்ப்பு சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கும். இந்த எதிர்ப்பு சக்தி உருமாறிய வைரஸ் உள்ளே வந்தால் அதனை விரட்டி அடிக்கும். இந்த எதிர்ப்பு சக்தி செல்கள் எண்ணிக்கையில் குறைவதற்கு வாய்ப்பில்லை என்று கூறிய விஞ்ஞானிகள், சிலருக்கு இதன் எண்ணிக்கை அவர்களது உடல் ஆற்றலை பொறுத்து அதிகமாகவே இருக்கலாம் என்று கூறி உள்ளனர்

dinamalar