இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி

புதுடில்லி: இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 3 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது. மேலும் ஒரே நாளில் 13,203 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்தது. 1.84 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,53,470 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.83 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.44 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.73 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஜன.,16 முதல் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 16,15,504 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஜன.,24) ஒரே நாளில் 5,70,246 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 19 கோடியே 23 லட்சத்து 37 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன

dinamalar