பிஐபிஜிஎன் : பிடிபிஆர்-உடன் பொருந்திக்கொள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

பள்ளி அமர்வு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரமே ஆன நிலையில், இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்முறை சில பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பி.டி.பி.ஆர். அணுகுமுறையில் கற்பிக்க ஆசிரியர்கள் போதுமான திறனைப் பெற்றிருக்கவில்லை, இது கற்றல் செயல்முறையைச் சீர்குலைக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.

இருப்பினும், கல்வித்துறையில் ‘வலிமையானவர்கள்’, புதிய வழிகளில் தங்களை மாற்றியமைத்துகொள்ள, கல்வியாளர்களுக்கு இடமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தேசியப் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் (பிஐபிஜிஎன்) தலைவர் பேராசிரியர் டாக்டர் மொஹமட் அலி ஹசன் கூறுகையில், தற்போதுள்ள ஆசிரியர்களுக்குச் செயல்திறன்மிக்க பி.டி.பி.ஆர். செயல்முறைகளைப்  பயிற்சிகளின் மூலம் அறிமுகப்படுத்தப்படலாம் என்றார்.

“இந்த பி.டி.பி.ஆர். புதிய செயல்முறை என்பதால், அனைத்து தரப்பினரும் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு, கல்வியாளர்கள் அதனை உண்மையிலேயே சரளமாகவும் திறமையாகவும் செயல்படுத்த போதுமான இடத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.

“அதே நேரத்தில், மலேசியக் கல்வி அமைச்சும் ஆசிரியர்கள் முறையான செயல்முறைகளை வெளிப்படுத்த, உள்ளூர் அல்லது வெளிநாட்டிலிருந்து பி.டி.பிஆரில் நிபுணர்களாகவும், திறமையானவர்களாகவும் இருக்கும் கல்வியாளர்களை அழைத்து, அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்க உத்தேசிக்க வேண்டும்,” என்று அவர், பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறியுள்ளார்.

அதே நேரத்தில், ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ) ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு உடனடியாகவும் அவ்வப்போதும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

மேலும், நாடு இன்னும் எதிர்கொண்டுவரும் சில அடிப்படை பிரச்சனைகளிலும் முக்கியக் கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் ஆசிரியர்கள் திறமையானவர்கள் என்றாலும், கிராமப்புறங்களில் இன்னும் விரிவானதாக இல்லாத இணைய இணைப்பு, போதுமான சாதனங்கள் மற்றும் பிறக் கருவிகள் இல்லாமை போன்ற இன்னும் பிற தடைகள் இருந்தால் பி.டி.பி.ஆரின் குறிக்கோளை அடைய முடியாது என்றார்.

“மேலும், முறையான மின்-பாடநூல் பொருட்கள்; உள்ளூர் உடனடி தொழில்நுட்ப உதவி; சீரான பணி திட்டமிடல் மற்றும் பாடத்திட்டம்; கணினிகள் மற்றும் சாதனங்களை எதிர்கொள்வது என பி.டி.பி.ஆரின் ஒவ்வொரு மட்டத்தையும் திறம்படக் கண்காணித்து, மதிப்பீடு செய்யவும் வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தேசியக் கற்பித்தல் சேவைகள் சங்கத்தின் (என்.யு.டி.பி.) தலைவர் அமினுதீன் அவாங் எதிர்காலத்தில், பி.டி.பி.ஆர். படிப்புகள் ஆசிரியர் கல்வி நிறுவனங்களிலும் (ஐ.பி.ஜி.), உயர்க்கல்வி கூடங்களிலும் (ஐ.பி.டி.) கற்பித்தல் படிப்புகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

“பி.டி.பி.ஆர். துறையில் ஆசிரியர்களுக்கானப் பயிற்சியின் அம்சம் உண்மையில் இதற்குப் பிறகு ஒரு தேவையானதாக மாறிவிடும் … இதற்குப் பிறகு பள்ளி வழக்கம் போல் திறக்கப்பட்டிருந்தாலும், பள்ளி நேருக்கு நேர் செயல்முறையின் ஒரு முக்கிய ஆதரவு ஊடகமாக பி.டி.பி.ஆர். இருக்கும்,” என்று அவர் கூறினார்.

“இந்த ஆண்டு ஆசிரியர்கள் பி.டி.பி.ஆரை ஒரு கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்துகிறார்கள் … கடந்த ஆண்டு, இது திடீரென வந்ததால், கல்வியமைச்சின் திட்டமிடல் இல்லாமல், ஆசிரியர்களுக்கு அனுபவமும் திறமையும் இல்லை என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது.

  • பெர்னாமா