நாடாளுமன்ற இடைநீக்கம், பிரதமரின் ஆலோசனைக்கு அன்வர் சவால்

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், அவசரக் காலத்தில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை, நீதித்துறை மறுஆய்வு செய்ய கோரி விண்ணப்பம் செய்தார்.

மற்றவற்றுடன், அவசரக் காலங்களில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு, மாமன்னருக்குப் பிரதமர் அளித்த அறிவுரை, சட்டத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென அன்வர் கோரியுள்ளார்.

“விண்ணப்பத்தில் சவால் செய்யப்படுவது அவசரகால அறிவிப்பு அல்ல என்பதை இங்கு வலியுறுத்த வேண்டும். ஆனால், அவசரக் காலக் கட்டளைச் சட்டத்தின் 14-வது விதிக்கு ஒப்புதல் அளிக்க மாமன்னரைப் பிரதமர் (அமைச்சரவை மூலம்) வலியுறுத்தியுள்ளது, (தேவையான அதிகாரங்கள்) 2021 இது அவசரகாலத்தில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துகிறது.

“பிரதமரின் ஆலோசனை சட்டத்திற்கு எதிரானது என்று கூறப்படுகிறது,” என்று அன்வரின் வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.