சலாவுதீன்: அமானா சட்டமன்ற உறுப்பினர்களை பி.எச். உறுப்பு கட்சி ஏற்றுக்கொள்வது சரியல்ல

பி.கே.ஆர். அமானாவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வது சரியானதல்ல, இது பக்காத்தான் ஹராப்பானின் ஒற்றுமை உணர்வை அடிப்படையாகக் கொண்டது என அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கூறினார்.

“பி.எச்.-இன் ஒற்றுமை உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும், பி.எச். கூட்டணியில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் ஏற்றுக்கொள்வது இனிமையானது அல்ல.

“கூட்டணியை உருவாக்கும் எந்தவொரு கட்சியும் இதனை ஒப்புக் கொள்ளாது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் இன்று தனது கீச்சகத்தில் தெரிவித்தார்.

ஜொகூரைச் சேர்ந்த மூன்று அமானா சட்டமன்ற உறுப்பினர்கள், பி.கே.ஆரில் பங்கேற்பது குறித்து சலாவுதீன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.