கணக்கெடுப்பு : பிரதமர் பதவியில் முஹைதீன் – 5 மலேசியர்களில் ஒருவர் மட்டுமே விரும்பம்

இன்ஸ்டிட்யூட் டாருல் ஏஹ்சான் (ஐடிஇ) நடத்திய ஓர் ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில், 19 விழுக்காட்டினர் மட்டுமே முஹைதீன் யாசின் நாடாளுமன்றம் முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி (46 விழுக்காடு) பேர் முஹைதீன் இராஜினாமா செய்ய வேண்டும், ஏனெனில் அவர் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறவில்லை என்றும், 29 விழுக்காட்டினர் பொதுத் தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இரண்டு விழுக்காட்டினர், முஹைதீன் அதிகாரத்தில் இருக்க அவசரகால அறிவிப்பைத் தொடர வேண்டும் என்று கூறினர்.

கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள், இன்று வெளியிடப்பட்ட ஐடிஇ “மூட் ராக்யாட் மலேசியா சீரி 1” (மலேசியர்களின் மனநிலை தொடர் 1) அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் கண்ட “ஷெராட்டன் நடவடிக்கையின்” முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28 வரை இயங்கலையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ஐடிஇ கூறியது.

ஐடிஇ ஆராய்ச்சி பிரிவின் மூத்த மேலாளர், கைருல் ஆரிஃபின் மொஹமட் முனீரைத் தொடர்பு கொண்டபோது, ​​பல கட்ட மாதிரி முறைகள் மூலம் 8,352  மாதிரிகள் இயங்கலையில் பெறப்பட்டன.

கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளின் மாதிரி விவரங்கள், ஒரு மெய்நிகர் கலந்துரையாடலில், ஐடிஇ தலைமை நிர்வாக அதிகாரி முகமது ரெட்ஜுவான் ஓத்மனால் பின்னர் வெளிப்படுத்தப்படும் என்று கைருல் ஆரிஃபின் கூறினார்.

இன்ஸ்டிட்யூட் டாருல் ஏஹ்சன், 2015-ஆம் ஆண்டில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிதியால் நிறுவப்பட்ட ஒரு சிந்தனைக் குழுவாகும்.

சீனர்கள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அதிகம் (21 விழுக்காடு) வாக்களித்தனர். அனைத்து முக்கிய இனத்தவர்களும் முஹைதீனின் இராஜினாமாவை ஆதரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முடியும் வரை முஹைதின் பதவில் இருக்க வேண்டுமென, மற்ற இனத்தவர்களை விட மலாய்க்காரர்கள் அதிகமாக (22 விழுக்காடு) விரும்புகின்றனர்.