எஸ்.ஆர்.சி. வழக்கு மேல்முறையீடு : நஜிப் பாதிக்கப்பட்டவர், வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்

RM42 மில்லியன் எஸ்.ஆர்.சி. சர்வதேச ஊழல் வழக்கு விசாரணையில், நஜிப் ரசாக் பலியாக்கப்பட்டார் என்று அம்முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வக்கீல் ஹர்விந்தர்ஜித் சிங், நஜிப் மீது வழக்குத் தாக்கல் செய்த குற்றவியல் மீறல் (சிபிதி) குற்றச்சாட்டுகள் மூன்றையும் குறிப்பிட்டார்.

அவரைப் பொறுத்தவரை, சிபிடி குற்றங்களுக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), வேறு மூன்று நபர்களைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டபோது அது நடந்தது.

முன்னாள் எஸ்.ஆர்.சி. இயக்குநர் சுபோ முஹமட் யாசின், முன்னாள் எஸ்.ஆர்.சி. தலைமை நிர்வாக அதிகாரி நிக் பைசல் அரிஃப் காமில் மற்றும் ரெட்ஸுவான் ஆடாம் ஷா ஆகியோரைக் கைது செய்வதற்கான சிவப்பு அறிவிப்பு தொடர்பானது அது.

2018 மே மாதம், பி.எச். நாட்டின் நிர்வாகத்தை ஏற்றதைத் தொடர்ந்து, இந்த மூன்று பேரும் மலேசியாவை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்டது.

“ஜூன் அல்லது ஜூலை (2018) மாதத்தில், இவர்கள் மூவருக்கும் எதிராக சிபிதி RM50 மில்லியனுக்கான சிவப்பு நோட்டிசை வெளியிடப்பட்டது.

“(இருப்பினும்) நஜிப் மீது வழக்குத் தொடர அரசு தரப்பு திடீரென முடிவு செய்தது,” என்று அவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ஜலீல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவிடம் கூறினார்.

பின்னர், யார் மீது குற்றம் சாட்டுவது என்பது குறித்து, அரசு வக்கில் முடிவு செய்யலாம் என்று அப்துல் கரீம் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் எஸ்.ஆர்.சி. கணக்கிலிருந்து RM42 மில்லியனை மாற்றும் செயல்முறையின் சிக்கலான தன்மை குறித்து விசாரித்தது.

அந்த நேரத்தில், நஜிப்பின் தனிப்பட்ட எம்பேங்க் கணக்கில் பணம் சேருவதற்கு முன்பு, கண்டிங்கான் மெந்தாரி சென். பெர். மற்றும் இஹ்சான் பெர்டானா சென். பெர். மூலம் பணம் அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு வாதிட்டது.

எஸ்.ஆர்.சி. மற்றும் கண்டிங்கான் மெந்தாரிக்குக் கையொப்பமிட்டவர்களாக சுபோ மற்றும் நிக் பைசல் அங்கீகரிக்கப்பட்டனர்.

“RM50 மில்லியன் எடுக்கப்பட்ட மற்றவர்களின் சிபிதி-க்கு, நஜிப் பொறுப்பாளியாக முடியாது,” என்று ஹர்விந்தர்ஜித் கூறினார்.