மத அடிப்படையில் ஓட்டு கேட்டதாக புகார் – மம்தா பானர்ஜிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

மம்தா பானர்ஜி

முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

மத அடிப்படையில் ஓட்டு கேட்டதாக புகார் – மம்தா பானர்ஜிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி, முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அதில் பேசுகையில், முஸ்லிம்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு ஓட்டு போட்டு, தங்கள் ஓட்டுகள் பிரிய வழிவகுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் மத அடிப்படையில் ஓட்டுகேட்டதாக பா.ஜனதா சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மம்தா பானர்ஜிக்கு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், மம்தா பானர்ஜியின் பேச்சு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும்வகையில் இருப்பதாக கூறியுள்ளது. எனவே, அடுத்த 48 மணி நேரத்துக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மம்தாவுக்கு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

maalaimalar