டிஏபி தலைவர்கள் வெளியேற்றப்படும் சாத்தியத்தை லோக் நிராகரிக்கவில்லை

அடுத்தக் கட்சித் தேர்தலில், பல இனக் கட்சியாக டிஏபியின் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்த விரும்பும் கட்சியின் தலைவர்களை அகற்றுவதற்கான முயற்சியை டிஏபி தேசிய அமைப்பின் செயலாளர் அந்தோனி லோக் இன்று நிராகரிக்கவில்லை.

மலாய் ஆதரவை ஈர்ப்பதற்காக, டிஏபி “சீனத்தன்மையை நீர்த்து” போகச் செய்யக்கூடாது என்று கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ரோனி லியு வலியுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

லியுவின் அறிக்கையை, டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மற்றும் செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ உள்ளிட்ட பிற டிஏபி தலைவர்களும் விமர்சித்தனர்.

ஜூன் மாத டிஏபி தேர்தலில், கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கும் லிம் குவான் எங் இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கட்சியின் அரசியலமைப்பின் படி, பதவிக் காலம் மூன்று தவணைகளுக்கு மட்டுமே இருக்க முடியும். லிம் 2004-ம் ஆண்டு முதல் அப்பதவியை வகித்து வருகிறார்.

44 வயதான லோக், லிம்-இன் வாரிசாக குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவர்.

“லியுவின் (பார்வை) கருத்து, கொள்கை அடிப்படையில் முழு டிஏபியையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, டிஏபி தலைமை எடுத்த அணுகுமுறையிலிருந்து அது வித்தியாசமானது, அதனால்தான் அவர் விமர்சிக்கப்பட்டார்.

“டிஏபி தலைமை எங்கள் பன்முகத்தன்மையை மேலும் சிறப்பிக்கும் ஒரு திசையை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்படுகிறது, சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் மற்றும் பிறருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், எனவே சிலர் உள் விமர்சனங்கள் ஏன் செய்ய வேண்டும்.

“தலைவர்களாகிய எங்களைப் பொறுத்தவரையில், கட்சித் தேர்தலில் இருந்து கட்சித் தலைமையிலிருந்து எங்களை வீழ்த்துவதற்கான முயற்சிகள் இருக்கலாம் என்றாலும், அதனைத் தாங்கத் துணிவதாக அவர் சொன்னார்.

“அதனால்தான் நாங்கள் டிஏபி உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும், இது ஒரு பல இனக் கட்சி, ஒரே ஓர் இனத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அல்ல, என்னைப் பொறுத்தவரை இது ஒரு தொடர்ச்சியான முயற்சி,” என்று லோக் மேலும் கூறினார்.

லியுவின் கருத்துக்கள் சில கட்சி உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக உள் விவாதம் நடைபெறுவதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

“பிரதிநிதிகளைப் பொறுத்தது, எங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது,” என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், லியுவின் அறிக்கைக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தேவையில்லை, ஏனெனில் அவர் தனது கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகிறார் என்று லோக் தெரிவித்தார்.