இன்று 2,340 புதிய நேர்வுகள், 11 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,340 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று 11 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,400 பேர் பலியாகியுள்ளனர். இன்று இறந்தவர்களில் 9 நோயாளிகள் மலேசியர்கள் ஆவர்.

இன்று 1,910 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 101 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் – 429 (25,558), கிளந்தான் – 370 (9,537), சபா – 172 (57,164), ஜொகூர் – 170 (43,703), கோலாலம்பூர் – 291 (40,880), பினாங்கு – 111 (18,578), நெகிரி செம்பிலான் – 24 (18,047), பேராக் – 38 (14,176), கெடா – 55 (9,228), மலாக்கா – 63 (7,011), பஹாங் – 81 (4,825), திரெங்கானு – 1 (3,919), லாபுவான் – 2 (2,436),  புத்ராஜெயா – 6 (1,286), பெர்லிஸ் – 1 (354).

இன்று 8 திரளைகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 11 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.