40 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல்

சார்ஸ்-CoV-2 (SARS-CoV-2) வேரியண்ட் (மாறுபாடு) ஆஃப் கன்சர்ன் (VOC) பரிமாற்றம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில், அந்த 40 நாடுகளையும் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளது :

அமெரிக்கா : அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, சிலி, மெக்சிகோ, கனடா, பெரு

ஐரோப்பா : ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, லிதுவேனியா, நெதர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், செக் குடியரசு, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து

மத்திய கிழக்கு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், கத்தார், இஸ்ரேல்

ஆப்பிரிக்கா : ருவாண்டா, தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், நைஜீரியா, தான்சானியா

ஆசியா : வங்களாதேசம், இந்தியா, கம்போடியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜப்பான்

இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் :

  1. மலேசியா வருவதற்கு முன்பு தொலைபேசியில் மைசெஜாத்திரா (MySejahtera) பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து, பதிவுசெய்து, செயல்படுத்தவும்.
  2. சர்வதேச நுழைவாயிலை (பிஎம்ஏ) பயணி வந்தவுடன், கியூஆர் குறியீட்டைப் பதிவு செய்ய மைசெஜாத்திராவைப் பயன்படுத்தவும்.
  3. பி.எம்.ஏ.-இல் காய்ச்சல் மற்றும் அறிகுறிகளுக்காகத் திரையிடுதல்.
  4. புறப்படும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், எதிர்மறையான முடிவுடன் இருக்கும் பயணிக்குக் கோவிட் -19 தொற்று கண்டறிதல் சோதனையை (ஸ்வேப் மாதிரி) மேற்கொள்ளுங்கள்.
  5. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்துதல் மையங்களில், 14 நாட்கள் கவனமாக கண்காணிப்பு உத்தரவுகளை (தனிமைப்படுத்துதல்) மேற்கொள்ளுங்கள்.
  6. தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களுக்கு மைசெஜாத்திரா-ஐப் பயன்படுத்தி ஒருவரின் உடல்நிலையைக் கண்காணித்தல். அறிகுறிகள் தென்பட்டால், மேலதிகப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கடமையில் உள்ள மருத்துவக் குழுவிடம் தெரிவித்தல்.
  7. தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் தங்கியிருக்கும் அறையிலிருந்து வெளியேற வேண்டாம்.
  8. கோவிட் -19 தொற்றின் மேலாண்மை தொடர்பாக அரசாங்கம் நிர்ணயிக்கும் எஸ்ஓபி-க்கள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு எல்லா நேரங்களிலும் இணங்கி இருங்கள்.
  9. மலேசியா வந்த நாளிலிருந்து 10-வது நாளில், கோவிட் -19 திரையிடல் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
  10. கோவிட் -19 கண்டறிதல் சோதனை எதிர்மறையாக இருந்தால் பயணிகள் 14-வது நாளில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

நேற்று தொடங்கி, இந்தியாவில் இந்த மாறுபாடு பரவியதைத் தொடர்ந்து, அங்குச் செல்லும் மற்றும் வந்திறங்கும் விமானங்களுக்கு அரசாங்கம் தற்காலிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பிரிட்டன் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

பொதுமக்கள் எஸ்ஓபி-க்களை முறையாகக் கடைபிடிக்காவிட்டால் இந்தப் புதிய மாறுபாடு பரவும் அபாயம் அதிகரிக்கும் எனப் பாதுகாப்பு அமைச்சர், இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மூன்று மாறுபாடுகள்

அமைச்சின் பட்டியலில், மாறுபாடு B.1.351, மாறுபாடு B.1.1.7 மற்றும் இங்கிலாந்து மாறுபாடு B.1.1.7 ஆகியவைக் கண்டறியப்பட்ட நாடுகளும் அடங்கும்.

உலகச் சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் இந்தப் பட்டியல் அமைந்துள்ளது.

மாறுபாடு B.1.351 ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவில் புகாரளிக்கப்பட்டது. இந்த மாறுபாடு கிருமி பரவுதலின் வீதத்தை அதிகரிக்கிறது மற்றும் சில தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கிறது.

இது நாட்டில் முதன்முதலாக, ஏப்ரல் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து மாறுபாடு B.1.17 – அல்லது யூ.கே. மாறுபாடு எனக் குறிப்பிடப்படுகிறது – இது கிருமி பரவலின் வீதத்தை அதிகரிக்கிறது, ஆனால் இதுவரை எந்தக் கிருமியின் செயல்திறனையும் குறைக்கக் காணப்படவில்லை.

தென்னாப்பிரிக்க மாறுபாடு-உடன் தொடர்புடைய நேர்வுகள் ஏற்கனவே நாட்டில் உள்ளன.

மூன்றாவது மாறுபாடு B.1.128 (P1), அல்லது பொதுவாகப் பிரேசிலிய மாறுபாடு என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அது அந்த நாட்டில்தான் முதலில் கண்டறியப்பட்டது. இது கிருமி பரவலின் வீதத்தை அதிகரிக்கிறது மற்றும் சில தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கிறது.