எம்.பி.எம். : `பள்ளிக்குச் செல்லாமல் போராட்டம்` – கல்வி ஒழுங்குமுறைக்கு எதிரானது

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்கும் பிரச்சாரம் கல்வி ஒழுங்குமுறைக்கு எதிரானது, கல்வி நிறுவனங்களை மதிக்க வேண்டும்.

மலேசிய இளைஞர் பேரவையின் (எம்.பி.எம்.) தலைவர் ஜுஃபித்ரி ஜோஹா, பாலியல் ரீதியான துன்புறுத்தல் பிரச்சினையை எதிர்ப்பதற்கும், பள்ளிகளை மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அமைதியான இடமாக, கிழக்கத்தியப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கும், இன்னும் பல ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள வழிகள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

“கற்றல் வகுப்புகளில் கலந்துகொள்வது அறிவு, ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர்களின் நடத்தைகளின் ஒரு பகுதியாகும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட எந்தவொரு துன்புறுத்தல்களிலிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள மாணவர்களுக்குப் பேசும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதனை எம்.பி.எம். ஒப்புக் கொள்கிறது, ஆனால் இந்த விஷயத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக, பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல் தொடர்பான பிரச்சினைகளை வைத்து விளையாடும் வாய்ப்பைப் பெறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி.எம் பரிந்துரைத்தது.

முன்னதாக, அரசு சாரா அமைப்புகளின் கூட்டணி ஒன்று, மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துன்புறுத்தல் கலாச்சாரத்தை எதிர்க்கும் விதமாகவும், கற்றலின் போது பாலியல் வல்லுறவை ஊக்குவிக்கும் விதமாகப் பேசிய ஓர் ஆசிரியரின் ஆபாச வார்த்தைகளைக் கண்டிக்கவும், ஒரு நாள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க கேட்டுக் கொண்டது.

  • பெர்னாமா