பினாங்கு மாநில டிஏபி மாநாடு கூடும் இடத்தில் 200 ராமசாமி ஆதரவாளர்கள் கூடினர்

பட்டர்வொர்த்தில் உள்ள பேர்ல்வியூ ஹோட்டலுக்கு முன்பு இன்று காலை எட்டு மணி தொடக்கம் பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் கூடினர்.

ராமசாமி தற்போது “ஞானாசிரியர்களும் ஜமீன்களும்” மீதான வாக்குவாதத்தில் மற்ற டிஏபி தோழர்களுடன் ஈடுபட்டுள்ளார்.

பினாங்கு மாநில டிஏபி ஆண்டு மாநாட்டுக்காக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர்கள் அந்த ஹோட்டலில் கூடியுள்ளனர்.

ராமசாமி தமது ஞானாசிரியர் கருத்தை மீட்டுக் கொண்டு கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்-கிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரியுள்ள ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், பத்து காவான் சட்டமன்ற உறுப்பினர் ஏ தனசேகரன் ஆகியோரைக் குறை கூறும் பதாதைகளை அவர்கள் வைத்திருந்ததுடன் சுலோகங்களையும் முழங்கினர்.

நிபோங் தெபால், பத்து காவான் வாக்காளர்கள் என்றும் ஹிண்ட்ராப், மக்கள் சக்தி ஆகிய அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்களைக் கூறிக் கொண்ட அந்த குழுவினர் “எங்களுக்கு ராமசாமி வேண்டும்” என்றும் “ராயர் இந்திய இனத்துக்குத் துரோகி” என்றும் கூச்சலிட்டனர்.

TAGS: