2020 எஸ்பிஎம் : 5 ஆண்டுகளில் சிறந்த தேர்வு முடிவு

2020 மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) 4.80 என்ற சாதனை, ஐந்து ஆண்டுகளில் தேசியச் சராசரி தரத்துடன் (ஜி.பி.என்.) சிறந்தது என்று மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

2019-இல் 4.86, 2018-இல் 4.89, 4.90 (2017) மற்றும் 5.05 (2016) ஆகவும் ஜி.பி.என். இருந்தது என்றும் ராட்ஸி கூறினார்.

2019-உடன் ஒப்பிடும்போது 2020-ஆம் ஆண்டில் மாணவர்களின் சாதனை அதிகமாக இருப்பதாக இந்தத் தரவு காட்டுகிறது. ஒரு சிறிய ஜிபிஎன் மதிப்பு, சிறந்த மாணவரின் சாதனையை குறிக்கிறது. இந்தப் பகுப்பாய்வு குறைந்தது ஆறு பாடங்களில் முதல் முறையாகப் பதிவுசெய்து, குறைந்தபட்சம் ஒரு பாடத்தையாவது எடுத்த மாணவர்களை அடிப்படையாகக் கொண்டது.

“2016 முதல் 2020 வரையிலான ஜிபிஎன் போக்கு, ஐந்தாண்டுகளில் 2020 சிறந்தது என்பதைக் காட்டுகிறது,” என்று இன்று, எஸ்பிஎம் 2020-இன் முடிவுகளை மெய்நிகரில் பகுப்பாய்வு செய்த போது அவர் சொன்னார்.

இருப்பிடத்தின் அடிப்படையிலான சாதனை இடைவெளியைப் பொறுத்தவரை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையிலான சாதனை இடைவெளி, 2019-ல் 0.44 ஆக இருந்தது, 2020-இல் 0.38 ஆக குறைந்துள்ளது.

-பெர்னாமா