அன்வர் என்னை அழைத்தார், ஆனால் அவரிடம் தீர்வு இல்லை – மகாதீர்

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமிடமிருந்து தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததை, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது உறுதிப்படுத்தினார்.

அந்த உரையாடலில், அவரும் பி.கே.ஆர். தலைவரும் நாட்டின் தற்போதைய நெருக்கடி பற்றி விவாதித்ததாக அவர் சொன்னார்.

இருப்பினும், பிரச்சினையைத் தீர்க்க அன்வாரால் எதையும் பரிந்துரைக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

“ஆகவே, நாங்கள் அகோங்கிற்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று நான் பரிந்துரைத்தேன்,” என்று, இன்று மாமன்னரிடம் உரையாற்றிய பின்னர் நடந்த ஓர் இயங்கலை பத்திரிகையாளர் சந்திப்பில் மகாதீர் கூறினார்.

அந்த உரையாடல், மே 28-ம் தேதி இரவு நடந்ததாக சீன மொழி நாளிதழ் சின் சியு டெய்லி தெரிவித்துள்ளது.

மாமன்னரைச் சந்திக்க விண்ணப்பித்து, கடிதம் எழுதியதாக மகாதீர் பின்னர் கூறினார், இதன் மூலமே, நேற்று முதல் அரசியல் தலைவர்களுடனான மன்னரின் சந்திப்பு தொடங்கியுள்ளது என்று அவர் நம்புகிறார்.