நோய்த்தடுப்பு திட்டத்தின் 4-ஆம் கட்டம், பணியிடத் திரளைகளைக் கட்டுப்படுத்த – கைரி

பணியிடத் திரளைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, முக்கியமானப் பொருளாதாரத் துறைகளை உள்ளடக்கியத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் 4-ஆம் கட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

தொற்றுநோய் கட்டுப்பாட்டு கட்டமான இந்த 4-ஆம் கட்டம், ஜூன் 28 வரை, முழு நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் செயல்படும் தொழில்துறைப் பகுதிகளில் தொடங்கப்படும் என்றார் அவர்.

“இந்தத் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் கட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் முக்கியமானப் பொருளாதாரத் துறைகளை உள்ளடக்கியது. மேலும் இது, தொழில்துறையினரிடையே விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும், இதனால், பணியிடத் திரளைகளைக் கட்டுப்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

நேற்று (ஜூன் 13) பதிவுசெய்யப்பட்ட 15 புதிய திரளைகளில் 11 பணியிடத் திரளைகள் ஆகும்.

கைரியின் கூற்றுப்படி, இந்த மாதத்தில் (ஜூன்) மொத்தம் 30,000 மருந்தளவு தடுப்பூசிகள் தொழிற்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் சரவாக் உட்படவில்லை.

இதற்கிடையில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், நாட்டின் ஒட்டுமொத்த தடுப்பூசி விகிதம் ஒரு நாளைக்கு 100,000 அளவுகளுக்கு மேல் பதிவாகியுள்ளது என்று கைரி கூறினார்.

கடந்த வாரம் ஜூன் 7 முதல் 13 வரை வழங்கப்பட்ட சராசரி மருந்தளவு ஒரு நாளைக்கு 130,842 மருந்தளவு என்றும், இது முந்தைய வாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 94,481 மருந்தளவிலிருந்து அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாதச் சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) 30,000 மருந்தளவு தடுப்பூசிகளை லாபுவானுக்கு விநியோகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • பெர்னாமா