1,588,915 பேர் தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவைப் பூர்த்தி செய்தனர்

நேற்றைய நிலவரப்படி, கோவிட்-19 தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது மருந்தளவுகள் 5,675,002-ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

மொத்தம் 1,588,915 பேர் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், 4,086,087 நபர்கள் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரண்டு மருந்தளவுகளை அதிகம் பெற்ற ஐந்து மாநிலங்களில் சிலாங்கூர் 207,077 என்ற எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, சரவாக் (181,690), ஜொகூர் (161,082), பேராக் (147,250) மற்றும் கோலாலம்பூர் (141,071) ஆகியவை உள்ளன என்று அவர் இன்று தனது கீச்சகம் மூலம் தெரிவித்தார்.

தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கான தினசரி தடுப்பூசிகளில், நேற்று 164,282 மருந்தளவுகள் வழங்கப்பட்டன. அதில் முதல் மருந்தளவை 128,400 பேரும், இரண்டாவது மருந்தளவை 35,882 பேரும் பெற்றதாக டாக்டர் ஆதாம் சொன்னார்.

இதற்கிடையில், www.vaksincovid.gov.my என்ற இணையதளத்தில், தடுப்பூசி பதிவுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறித்த தினசரி அறிக்கையின் அடிப்படையில், மொத்தம் 15,072,779 பதிவுகள் நேற்றைய நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • பெர்னாமா